University of Jaffna – convocation -2010

Posted 06/10/2010 by Makkal
Categories: News

University of Jaffna ,Sri lanka convocation held on 06.10.10 at 9.00 o’clock. Procession started near ramanathan building, function took place in Kailasapathy Auditorium.1100 students were awarded for degree in this ceremony.

ஏழாவது கூழி புத்தக வெளியீட்டு விழா

Posted 25/09/2010 by Makkal
Categories: News

இசைக்கச்சேரியுடன் (25.09.10,4.00pm) ஆரம்பமான இந்த நிகழ்வு சுந்தரம் திவகலாலா தலைமையில் நடைபெற்றது.வைத்திய கலாநிதி யமுனானந்தா வெளியீட்டுரை நிகழ்த்தினார்.ர~;யாவின் vacuum குண்டின் மூலம் சுற்றுச்சூழலைப்பாதுகாக்கலாம் என்ற கருத்து சுற்றுச்சூழல் தொடர்பான நூல் வெளியீட்டில் முரண்நகையாகக் காணப்பட்டது.நூலாய்வு நிகழ்த்திய மதுசூதனன் வாசிப்புப்பழக்கம் அருகி வருவது பற்றி ஆதங்கப்பட்டார்.பேராசிரியர் சிவச்சந்திரன் தனது புவியியல் சார்ந்த அறிவுப்புலத்தில் விரிவாக சுற்றுச்சூழல் எழுவினாக்களை விவாதித்தார்.

யாழ்மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் பத்தகத்தை வெளியிட்டுவைத்தார்.சுற்றுச்சூழல் பற்றிய சித்தையின்றிய இவரைக்கொண்டு நூலை வெளியிட்டது நிகழ்வின் அரசியலை துலக்கி நின்றது எனலாம்.

நூலாசிரியர் ஜங்கரநேசன் தனக்கு தன்இனத்தின் மீதும்மண்ணின் மீதும் உள்ள உறவைப்பறை சாற்றுவதாக ஓர் அரசியல்வாதிக்குரிய மிடுக்குடன் பேசினார்.எனது கருத்துக்காக நிலைத்து நின்று மாண்டு போவேனே தவிர எதற்காகவும் கருத்தையோ நிலைப்பாட்டையோ மாற்றிக்கொள்ள மாட்டேன் என்ற கொந்தளிப்பான பேச்சு வந்திருந்தோரைகவர்ந்தது.கடந்த 15 ஆண்டுகளாக தனது சொந்த மண்ணில் இல்லாது தற்போதும் சென்னையில் குடியிருக்கும் இதுபோன்ற அரசியல்வாதிகளின் உணர்ச்சிமிகு பேச்சுக்கள் யாழ் மக்களை எவ்வளவுக்கு உசுப்பேத்துமென்பதை பொறுத்திருத்துதான்பார்க்கலாம்.

தஞ்சைப் பெரியகோயில்

Posted 23/09/2010 by Makkal
Categories: Article

அந்தக் கோவில் கட்டுமானத்தில் சுடு செங்கல் இல்லை. மரம் இல்லை. சொறிகல் என்ற பூராங்கல் இல்லை. மொத்தமும் கருங்கல். நீலம் ஓடிய, சிவப்பு படர்ந்த கருங்கல். உயர்ந்த கிரானைட். இரண்டு கோபுரங்கள் தாண்டி, விமானம் முழுவதும் கண்களில் ஏந்திய அந்தக் கோவிலின் நீளமும்,

அகலமும், உயரமும் பார்க்கும்போது, வெறும் வண்டல் மண் நிறைந்த அந்தப் பகுதிக்கு இத்தனை கற்கள் எங்கிருந்து வந்தன, எதில் ஏற்றி, இறக்கினர், எப்படி இழுத்து வந்தனர், எத்தனை பேர், எத்தனை நாள், எவர் திட்டம், என்ன கணக்கு.


Read the rest of this post »

பொ,ஜங்கரநேசனின் ‘ஏழாவது ஊழி’

Posted 20/09/2010 by Makkal
Categories: News

இமை,இயற்கை,பண்பாட்டு மரபுவளப் பேணுகை மையம் பொ,ஜங்கரநேசனின் ‘ஏழாவது ஊழி’ என்ற நூலை வெளியிடுகிறது.சுற்றுச்சூழல் தொடர்பான இந்த நூல் வெளியீடு எதிர்வரும் 25.09.10 அன்று மாலை 4.00 மணிக்கு யாழ் இந்துக் கல்லூரி குமாரசாமி மண்டபத்தில் நடைபெறும்.

ஜங்கரநேசன் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்ட ஒரு வேட்பாளர்.சுரேஸ் பிரேமச்சந்திரனின் சிபார்சின் பிரகாரம் 15 ஆண்டுகளின் பின் இந்தியாவில் இருந்து மீளவந்து யாழ்மாவட்டத்தில் போட்டியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

.

Karunanithi Family and Tamil film industry

Posted 19/09/2010 by Makkal
Categories: Culture

TM CS Karufamily Sept8 revised 

  

பேராசிரியர் செ.சிவஞானசுந்தரம் நினைவுப் பேருரை

Posted 15/09/2010 by Makkal
Categories: Studies

Jaffna Medical Association organised a Prof C.Sivagnasundaram Oration & Cultural show 2010.

Prof K.Sivapalan,( Head Department of physiology & Dean, Faculty of Medicine, University of Jaffna )has delivered Prof C.Sivagnanasundaram oration on Sunday,12th of September 2010 at 4.00pm at Kailasapathy Auditorium, University of Jaffna.

பேராசிரியர் செ.சிவஞானசுந்தரம் நினைவுப் பேருரை கடந்த 12ம் திகதி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் நடைபெற்றது.யாழ்ப்பாண மருத்துவச் சங்கம் இதனை ஒழுங்கு செய்திருந்தது.நினைவு பேருரையை மருத்துவ பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர கே.சிவபாலன்  ‘யாழ்ப்பாணத்தில் மருத்துவக் கல்வி என்ற தலைப்பில் வழங்கியிருந்தார் இதனை தொடர்ந்து டாக்டர் கெங்காதரனின் புல்லாங்குழல் கச்சேரியும், சோ.பத்மநாதன் தலைமையில் காதல் என்ற தலைப்பில் ஆங்கில கவிதை வாசிப்பு,சுகன்யா.அ இசைப்பாடல் கச்சேரியும் ,சாந்தினி .சிவனேசனின் நாட்டிய நடனநிகழ்ச்சியும் நடந்தேறியது.

நல்லூர் கோவில் தேர் திருவிழா

Posted 07/09/2010 by Makkal
Categories: Culture

யாழ்ப்பாண நல்லூர் கோவில் தேர் திருவிழா 07.09.2010.முருகப்பெருமான் தேரிலிருந்து இங்;கிவரும் கண்கொள்ளாக்காட்சி.

பொலிஸ் மற்றும் இராணுவத்தினரின் ஏ.கே 47 பாதுகாப்புடன் நடைபெற்ற இந்த ஆண்டு திருவிழாவின் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டார்கள்.வெளிநாடுகளிலிருந்து வந்திருந்த தமிழர்கள் மற்றும் தென்பகுதிகளிலிருந்து வந்திருந்த  சிஙகளவர்களும் அதிகளவில் பங்கு கொண்டரரகள.இராணுவமயப்பட்டிருந்த இவ்வாண்டு திரு விழாவில் இராணுவத்தினரும்  சைவ உணவளித்தார்கள்

மந்திரி மனை

Posted 31/07/2010 by Makkal
Categories: Culture

மந்திரி மனை
யாழ்ப்பாணம் ,நல்லூர் ,பருத்தித்துறை வீதியில் சட்டநாதர் கோயிலுக்கு சற்றுத் தெற்காக நல்லூரின் பாரம்பரிய வரலாற்றை நினைவு படுத்தும் வகையில் அமைந்துள்ளது மந்திரி மனை.
இதன் கட்டட அமைப்பும் மரத்தாலான சிற்ப்ப வேலைப்பாடுகள் நூதனமான கலை மரபை எடுத்துக்காட்டுகின்றன.
பொதுவாக வெளித்தோற்ற அமைப்பும் ஒல்லாந்தர் கால கலை மரபைப்பின்பற்றி நின்றாலும் அதில் சுதேச கலை மரபும் கலந்திருப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.இங்கிருந்து ஜமுனா ஏரிக்குப் போவதற்கான சுரங்கப்பாதை காணப்பட்டதாகவும் குறிப்பிடப்படுகிறது.

Photo by Thevananth

யமுனா ஏரி

Posted 31/07/2010 by Makkal
Categories: Culture

யமுனா ஏரி

நல்லூர் சங்கிலியன் கல் தோரணை வாசலுக்குக் கிழக்கே சில யார் தூரத்தில் அமைந்துள்ளது இந்த யமுனா ஏரி.நல்லூர் ராச தானி காலத்து முக்கிய நினைவுச் சின்னங்களில் ஒன்றாக இது இன்றும் போற்றப்படுகின்றது.

யாழ்ப்பாண அரசர்களில் ஒருவரான சிங்கைப்பரராசசேகரன் என்பவன் தனது சமய ஆர்வமிகுதியால் தானும் குடிகளும் நன்மை பெறக்கருதி 1478 ஆம் ஆண்டில் யமுனா ஆற்றிலிருந்து காவடியாக நீரைக் கொண்டு வந்து பிரதிட்டை செய்ததால்  இப்பெயர் பெறப்பட்டதாக முதலியார் இராசநாயகம் தெரிவிக்கிறார்.

‘ப’ வடிவில் அமைந்த இவ்வேரி பொழிந்த முருகைக்கற்களையும்,வெள்ளைக்கற்களையும் கொண்டு கட்டப்பட்டுள்ளது.

இவ்வேரியைச் சுற்றி சில கட்டடத் தொகுதிகள் இருந்திருக்கலாம் என்பதை இங்குள்ள செங்கட்டி வேலைப்பாடுடைய சுண்ணாம்முச் சாந்தினால் ஆன தூண்கள் பழைய ஓடுகள்,பட்பாண்டங்கள் என்பன உறுதிப்படுத்துனின்றன.சிலர் இவ்விடத்தில் அரச மகளீர் குளிப்பதற்கான மண்டபங்கள் இருந்ததாகக் கருதுகின்றனர்.

Posted 30/04/2010 by Makkal
Categories: Visitors

free counters

இரு தேசம் பேசுவோர் எதற்காக சிறிலங்கா நாடாளுமன்றக் கதிரைகளுக்கு அடிபடுகிறார்கள்?

Posted 10/03/2010 by Makkal
Categories: Article, Politics

இரு தேசம் பேசுவோர் எதற்காக சிறிலங்கா நாடாளுமன்றக் கதிரைகளுக்கு அடிபடுகிறார்கள்?
                                                                                                                           –

                                                                                                                         
இலங்கைத் தீவின் தமிழர்கள் மீது ‘பரிதாபப்பட்டு’, அவர்களைத் துயரத்தில் இருந்து மீட்டெடுக்கும் மீட்பர்களாக இப்போது பலர் தங்களைத் தாங்களே பிரகடனப்படுத்திக் கொண்டுள்ளார்கள். இவர்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களும் அடங்குவர். இவர்கள் தமிழ் மக்களின் மீட்சிக்காக எனக் கூறிக் கொண்டு புதிய அரசியல் கட்சிகளையும் உருவாக்கி வருகிறார்கள். இதில் கடைசியாக உருவாக்கப்பட்டிருப்பது ‘தமிழ்த் தேசியத்திற்கான முன்னணி’. ஜி.ஜி.பொன்னம்பலத்தின் பேரன் தலைமையில் இக்கட்சி செயற்படுகிறது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களில் வேறு சிலரும் (சிவாஜிலிங்கம், சிறிகாந்தா) தமது அரசியல் அபிலாஷைகளை அடைவதற்கு வசதியாக வேறு கட்சிகளை உருவாக்கி உள்ளார்கள். தமிழ்த் தேசியம், இறைமை உள்ள தனியரசு என்ற கோ~ங்களுடன் இக் கட்சிகள் உருவாக்கம் பெறுகின்றன.
அண்மைக் காலமாக ஈழத்து அரசியல்வாதிகளின் இச் செயற்பாடுகள் தமிழ் மக்களுக்கு ஒரு தெளிவான தகவலைத் தந்து நிற்கிறது. “மக்களே! இனிவரும் காலங்களில் தமிழர்களுக்கு ஏகப் பிரதிநிதிகள் என்று எவரும் இல்லை; நாங்கள் அனேகம் பிரதிநிதிகள் இருக்கிறோம்” என்பதுவே அந்தத் தகவல்.
ஏகம் அனேகமாகி விட்ட விந்தை கண்டு தமிழ் மக்கள் வியந்து நிற்கிறார்கள்.

Read the rest of this post »

வன்னியில் நாடகச்செயற்பாடுகள்

Posted 07/08/2010 by Makkal
Categories: Uncategorized

செயல் திறன் அரங்க இயக்கம் வன்னி பெருநிலப்பரப்பில் கடந்த 6-08-10,7-08-10 ஆகிய திகதிகளில் சிறுவர் நாடகப்பயிற்சி மற்றும் நாடகமேடையேற்றங்களை வவுனியா வடக்கு கல்வி வலயப்பணிப்பாளரின் ஒழுங்கமைப்பில் மேற்கொண்டிருந்தனர்.

களப்பயிற்சியல் 30 ஆசிரியர்கள் பங்கு பற்றினார்கள் பயிற்சி வளங்குனராக தே.தேவானந் செயற்பட்டார்.குழந்தை ம. சண்முகலிங்கத்தின் கண்டறியாத கதை நாடகம் நெடுங்கேணி மகா வித்தியாலயம்,புளியங்கூடல் இந்து மகா வித்தியாலயம்,கனகராயன் மத்திய மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் மேடையேற்றப்பட்டது.

யுத்தத்தினால் கடுமையாகப்பாதிக்கப்பட்ட இப்பிரதேசத்தில் முதல் தடவையாக மேற்கொள்ளப்பட்ட இம் முயற்சி பலரதும் பாராட்டைப் பெற்றிருந்தது

நல்லூர் கோவில்

Posted 01/08/2010 by Makkal
Categories: Culture

 

நல்லூரின் ஆதி கோயில் போத்துக்கேயரால் இடிக்கப்பட்டதாகும்.இது பற்றி குவேறோஸ் சுவாமிகள் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.
 
‘யாழ்ப்பாணத்தை இறுதியாக வென்ற போத்துக்கேய தளபதி பிலிப்டி ஒலிவீரா 1620 இல் நல்லூருக்குச் சென்றான் அங்கிருந்த பெரிய கோயிலிலே கிறிஸ்தவர்கள் அல்லாதவர் மிக்க ஈடுபாடு உடையவர்கள்.அவர்கள் அதனை அழியாது விட்டுச் சென்றால் அவன்

               photo by Thevananth                                                                                       விரும்பிய எல்லாவற்றையும் வழங்குவதாகவும் பலமுறை வாக்குறுதி செய்து வந்தனர்.ஆனால் அவன் மதப்பற்றுமிக்க கத்தோலிக்கனாகையால் அவர்களின் நடவடிக்கை அக்கோயிலை அவன் அழிக்கக்கொண்டிருந்த விருப்பத்தை மேலும் அதிளரிக்கச் செய்தது.எனவே அதன் அத்திவாரத்தையும் இல்லாது அழிக்கக் கட்டளையிட்டான்.’
இக்கூற்றை யாழ்ப்பாண வைபவமாலை உறிதிப்படுத்துகிறது.
போத்துக்கேயரால் இடிக்கப்பட்ட பழைய கந்தசுவாமி கோயிலானது தற்போது முத்திரைசடசந்தியில் அமைந்துள்ள சங்கிலியன் சிலைக்கு முன்புள்ள கிறிஸ்தவ ஆலயத்தை அண்டியுள்ள பகுதியில் இருந்துள்ளது என்பதற்கு சில தொல்லியல் ஆதாரங்கள் உள்ளன.