Archive for the ‘Article’ category

தஞ்சைப் பெரியகோயில்

23/09/2010

அந்தக் கோவில் கட்டுமானத்தில் சுடு செங்கல் இல்லை. மரம் இல்லை. சொறிகல் என்ற பூராங்கல் இல்லை. மொத்தமும் கருங்கல். நீலம் ஓடிய, சிவப்பு படர்ந்த கருங்கல். உயர்ந்த கிரானைட். இரண்டு கோபுரங்கள் தாண்டி, விமானம் முழுவதும் கண்களில் ஏந்திய அந்தக் கோவிலின் நீளமும்,

அகலமும், உயரமும் பார்க்கும்போது, வெறும் வண்டல் மண் நிறைந்த அந்தப் பகுதிக்கு இத்தனை கற்கள் எங்கிருந்து வந்தன, எதில் ஏற்றி, இறக்கினர், எப்படி இழுத்து வந்தனர், எத்தனை பேர், எத்தனை நாள், எவர் திட்டம், என்ன கணக்கு.


(more…)

தமிழ் தேசியக் கூட்டமைப்பு செய்ய வேண்டியது என்ன?

23/06/2010

ஈழத் தமிழ் அரசியல் பற்றிய நீண்ட நெடிய விவாதங்களை ஆரம்பிக்க வேண்டிய காலகட்டத்தில் தமிழ் மக்கள் இருக்கிறார்கள். விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்ட வீழ்ச்சி தமிழ் மக்களின் அரசியல் இயங்கு நிலையை ஒரு கையறு நிலைக்குத் தள்ளியது. இதனால், தமிழர் தம் அபிலாi~களையும் தேவைகளையும் அடைவதற்காக வாக்குகளைப் பயன்படுத்திக் கொள்வது தொடர்பான குளறுபடியான நிலைமைகள் தொடர்கின்றன. கடந்த தேர்தலில் அதிகளவான தமிழ் மக்கள் வாக்களிக்கவில்லை. இது தேசிய அரசியலில் அல்லது தேர்தல் ஜனநாயகத்தில் தமிழ் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படவில்லை என்பதைத் தெளிவுபடுத்துகின்றது. முஸ்லிம் மக்களுடன் ஒப்பிடும்போது வாக்குச் சீட்டுக்களைப் பேரம் பேசும் பலமாகத் தமிழ் மக்கள் இன்னும் கருதவில்லை என்பது தெளிவாகின்றது. இந்த நிலைமை நீடிக்கப் போகின்றதா? அல்லது படிப்படியாக தேர்தல் அரசியலுக்குள் தமிழ் மக்கள் வந்துவிடுவார்களா? வாக்குச்சீட்டை தமது தேவைகளையும் அபிலாi~களையும் நிலைநிறுத்துவதற்கான ஒரு துருப்புச் சீட்டாகக் கருதுவார்களா என்ற எழுவினாக்கள் இன்னமும் இருக்கின்றன. அதேவேளை தேர்தல் ஜனநாயகத்தை தெரிவு செய்ய வேண்டியவர்களாகவும் தமிழ் மக்கள் காணப்படுகின்றார்கள். இந்தச் சூழலில் மக்களை அரசியல் மயப்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது. ஆயுதப் போராட்டம் வலுவாக இருந்த காலகட்டத்திலும் மக்களை அரசியல் மயப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டே வந்திருக்கின்றன. இது சிறு குழு அழுத்தமாக அமைந்தமையும் ஆயுதப் போராட்டம் அந்த நம்பிக்கையும் இதனால் பிரதான நீரோட்டத்தில் இந்தக் கோரிக்கைகளின் புறக்கணிப்பும் தமிழ் மக்கள் ஒரு அரசியல் சூனிய வெளிக்குள் சிறைப்பட வேண்டியதாயிற்று. இன்று ஈழத் தமிழர் தம் அரசியலின் முக்கியமான பலமாகத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு காணப்படுகின்றது.

(more…)

இரு தேசம் பேசுவோர் எதற்காக சிறிலங்கா நாடாளுமன்றக் கதிரைகளுக்கு அடிபடுகிறார்கள்?

10/03/2010

இரு தேசம் பேசுவோர் எதற்காக சிறிலங்கா நாடாளுமன்றக் கதிரைகளுக்கு அடிபடுகிறார்கள்?
                                                                                                                           –

                                                                                                                         
இலங்கைத் தீவின் தமிழர்கள் மீது ‘பரிதாபப்பட்டு’, அவர்களைத் துயரத்தில் இருந்து மீட்டெடுக்கும் மீட்பர்களாக இப்போது பலர் தங்களைத் தாங்களே பிரகடனப்படுத்திக் கொண்டுள்ளார்கள். இவர்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களும் அடங்குவர். இவர்கள் தமிழ் மக்களின் மீட்சிக்காக எனக் கூறிக் கொண்டு புதிய அரசியல் கட்சிகளையும் உருவாக்கி வருகிறார்கள். இதில் கடைசியாக உருவாக்கப்பட்டிருப்பது ‘தமிழ்த் தேசியத்திற்கான முன்னணி’. ஜி.ஜி.பொன்னம்பலத்தின் பேரன் தலைமையில் இக்கட்சி செயற்படுகிறது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களில் வேறு சிலரும் (சிவாஜிலிங்கம், சிறிகாந்தா) தமது அரசியல் அபிலாஷைகளை அடைவதற்கு வசதியாக வேறு கட்சிகளை உருவாக்கி உள்ளார்கள். தமிழ்த் தேசியம், இறைமை உள்ள தனியரசு என்ற கோ~ங்களுடன் இக் கட்சிகள் உருவாக்கம் பெறுகின்றன.
அண்மைக் காலமாக ஈழத்து அரசியல்வாதிகளின் இச் செயற்பாடுகள் தமிழ் மக்களுக்கு ஒரு தெளிவான தகவலைத் தந்து நிற்கிறது. “மக்களே! இனிவரும் காலங்களில் தமிழர்களுக்கு ஏகப் பிரதிநிதிகள் என்று எவரும் இல்லை; நாங்கள் அனேகம் பிரதிநிதிகள் இருக்கிறோம்” என்பதுவே அந்தத் தகவல்.
ஏகம் அனேகமாகி விட்ட விந்தை கண்டு தமிழ் மக்கள் வியந்து நிற்கிறார்கள்.

(more…)