Archive for the ‘News’ category

University of Jaffna – convocation -2010

06/10/2010

University of Jaffna ,Sri lanka convocation held on 06.10.10 at 9.00 o’clock. Procession started near ramanathan building, function took place in Kailasapathy Auditorium.1100 students were awarded for degree in this ceremony.

ஏழாவது கூழி புத்தக வெளியீட்டு விழா

25/09/2010

இசைக்கச்சேரியுடன் (25.09.10,4.00pm) ஆரம்பமான இந்த நிகழ்வு சுந்தரம் திவகலாலா தலைமையில் நடைபெற்றது.வைத்திய கலாநிதி யமுனானந்தா வெளியீட்டுரை நிகழ்த்தினார்.ர~;யாவின் vacuum குண்டின் மூலம் சுற்றுச்சூழலைப்பாதுகாக்கலாம் என்ற கருத்து சுற்றுச்சூழல் தொடர்பான நூல் வெளியீட்டில் முரண்நகையாகக் காணப்பட்டது.நூலாய்வு நிகழ்த்திய மதுசூதனன் வாசிப்புப்பழக்கம் அருகி வருவது பற்றி ஆதங்கப்பட்டார்.பேராசிரியர் சிவச்சந்திரன் தனது புவியியல் சார்ந்த அறிவுப்புலத்தில் விரிவாக சுற்றுச்சூழல் எழுவினாக்களை விவாதித்தார்.

யாழ்மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் பத்தகத்தை வெளியிட்டுவைத்தார்.சுற்றுச்சூழல் பற்றிய சித்தையின்றிய இவரைக்கொண்டு நூலை வெளியிட்டது நிகழ்வின் அரசியலை துலக்கி நின்றது எனலாம்.

நூலாசிரியர் ஜங்கரநேசன் தனக்கு தன்இனத்தின் மீதும்மண்ணின் மீதும் உள்ள உறவைப்பறை சாற்றுவதாக ஓர் அரசியல்வாதிக்குரிய மிடுக்குடன் பேசினார்.எனது கருத்துக்காக நிலைத்து நின்று மாண்டு போவேனே தவிர எதற்காகவும் கருத்தையோ நிலைப்பாட்டையோ மாற்றிக்கொள்ள மாட்டேன் என்ற கொந்தளிப்பான பேச்சு வந்திருந்தோரைகவர்ந்தது.கடந்த 15 ஆண்டுகளாக தனது சொந்த மண்ணில் இல்லாது தற்போதும் சென்னையில் குடியிருக்கும் இதுபோன்ற அரசியல்வாதிகளின் உணர்ச்சிமிகு பேச்சுக்கள் யாழ் மக்களை எவ்வளவுக்கு உசுப்பேத்துமென்பதை பொறுத்திருத்துதான்பார்க்கலாம்.

பொ,ஜங்கரநேசனின் ‘ஏழாவது ஊழி’

20/09/2010

இமை,இயற்கை,பண்பாட்டு மரபுவளப் பேணுகை மையம் பொ,ஜங்கரநேசனின் ‘ஏழாவது ஊழி’ என்ற நூலை வெளியிடுகிறது.சுற்றுச்சூழல் தொடர்பான இந்த நூல் வெளியீடு எதிர்வரும் 25.09.10 அன்று மாலை 4.00 மணிக்கு யாழ் இந்துக் கல்லூரி குமாரசாமி மண்டபத்தில் நடைபெறும்.

ஜங்கரநேசன் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்ட ஒரு வேட்பாளர்.சுரேஸ் பிரேமச்சந்திரனின் சிபார்சின் பிரகாரம் 15 ஆண்டுகளின் பின் இந்தியாவில் இருந்து மீளவந்து யாழ்மாவட்டத்தில் போட்டியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

.