யாழ்ப்பாணத்தில் காணப்படும் பாரம்பரிய விளையாட்டுக்கள்


யாழ்ப்பாணத்தில் காணப்படும் பாரம்பரிய விளையாட்டுக்களும் அவை எதிர்நோக்கும் சவால்களும் 

                                                                                                                                                                                                                                               -தே.தேவானந்த்   –

 யாழ்ப்பாணத்தின் தென்மராட்சி, வடமராட்சி, வலிகாமம் பகுதிகளில் பரவலாக சிறுவர்கள், இளைஞர்கள் வயது முதிர்ந்தவர்கள் எனப்பலரும் விளையாடுகின்ற என்பத்தியைந்து விளையாட்டுக்களைத் தொகுத்துக் கொள்ள முடிந்தது. இவ்விளையாட்டுக்களை ஆராய்ந்த போது பின்வரும் அடிப்படையில் அவற்றை பிரதானமாக வகைப்படுத்திக் கொள்ளலாம்.

i. குழந்தைப் பருவ விளையாட்டுக்கள்

ii. சிறுவர் விளையாட்டுக்கள்

iii. பெரியவர்களுக்கான விளையாட்டுக்கள்

இதனை விட,

 மென் விளையாட்டுக்கள்

 இடைநிலை விளையாட்டுக்கள்

 வன் விளையாட்டுக்கள்

 என்றும் வகைப்படுத்த முடியும். மேலும்,

 உள்ளக விளையாட்டுக்கள்

 வெளிய ஃ புற விளையாட்டுக்கள்

 என்ற வகைப்பாட்டின் அடிப்படையிலும் பார்க்க முடியும். வெளிய, உள்ளக விளையாட்டுக்களில் இருந்து, நின்று விளையாடும் விளையாட்டுக்களாக இனங்காண்கின்ற அதேவேளை அவற்றையும்,

 கோட்டு விளையாட்டுக்கள்

 கோடு அல்லா விளையாட்டுக்கள்.

 எனவும் கூட வகைப்படுத்திப் பார்க்கலாம்.

யாழ்ப்பாணத்தைப் பொறுத்தமட்டில் புதுவருடப் பிறப்பை முன்னிட்டு சனசமூக நிலையங்கள், கிராம அபிவிருத்தி மன்றங்களால் நடத்தப்படும் பாரம்பரிய விளையாட்டு நிகழ்வுகளில் விளையாடப்படும் விளையாட்டுக்களையே பாரம்பரிய விளையாட்டுக்களாகக் கருதிக் கொள்கின்ற நிலை காணப்படுகின்றது. குறிப்பாக மாட்டுவண்டிச் சவாரி, முட்டி உடைத்தல், கயிறு இழுத்தல், கிறீஸ் கம்பம் ஏறுதல், தலையணைச் சண்டை, போர்த் தேங்காய் உடைத்தல், கிளித்தட்டு, கபடி, ஒப்பு, சாக்கோட்டம் விளையாட்டுக்களே பாரம்பரிய விளையாட்டுக்களாகக் கொள்ளப்படுகின்றன.
 

சங்கீதக் கதிரை பாரம்பரியத்துக்குள் இல்லாவிட்டாலும் இன்று அதுவும் ஒரு பாரம்பரிய விளையாட்டாகக் கருதத்தக்க அளவிற்கு மக்கள் மத்தியில் கலந்திருப்பதையும் அவதானிக்க முடிகின்றது.
 

கிளித்தட்டு விளையாட்டுக்கு அங்கம் அமைக்கப்பட்டு அதனூடாக போட்டிகள் நடத்தபடுகின்றன. பொதுவான விதிகள் நிர்ணயிக்கப்பட்டு அச்சடிக்கப்பட்டுள்ளன. நடுவர்களுக்கான பயிற்சிகளும் கூட வழங்கப்பட்டுள்ளன. போட்டி நடத்தப்படுவதால் யாழ் மாவட்டத்தில் அனைத்துப் பிரதேசத்திலும் அனைத்துத் தரப்பினராலும் விளையாடப்படுகின்ற விளையாட்டாக கிளித்தட்டு விளையாட்டு பரவலடைந்துள்ளது.
 

யாழ். மாவட்டத்தில் காணப்படும் விளையாட்டுக்களை ஆண்களுக்கான விளையாட்டுக்கள் பெண்களுக்கான விளையாட்டுக்கள் என்று வகைப்படுத்திக் கொள்ள முடியவில்லை. காரணம் அனைத்து விளையாட்டுக்களும் ஆண், பெண் இருபாலாராலும் விளையாடப்படுகின்றன. கொக்கான் விளையாட்டு பெண்களுக்காகச் சுட்டிக் காட்டப்பட்டாலும் சிறுவர்கள் விளையாடும் போது ஆண், பெண் இருபாலாரும் விளையாடுகின்றார்கள்.

சிலவகையான தொழில் திறன்களுக்கான போட்டிகளும் பாரம்பரிய விளையாட்டுக்களாகவே சுட்டிக்காட்டப்படுகின்றன. குறிப்பாக கிடுகு பின்னுதல். ஊசி நூல் கோர்த்தல், மரம் ஏறுதல், தேங்காய் துருவுதல் போன்ற தொழில்சார் கைவினைச் செயற்பாடுகள் பாரம்பரிய விளையாட்டுக்களாக கருதப்படுகின்றன. ஆனால் இவ்வாய்வில் தொழில்சார் செயற்பாடுகளை பாரம்பரிய விளையாட்டுக்களாகக் கருதிக் கொள்ளவில்லை.

இத்தோடு, கிராமங்களுக்குரிய விளையாட்டுக்கள் நகர்புற விளையாட்டுக்கள் என்ற வகைப்பாட்டுக்குரியதாகவும் எந்தவொரு விளையாட்டையும் கண்டு கொள்ளமுடியவில்லை. யாழ்ப்பாணம் நகர்சார்ந்த பண்பாட்டை திட்டவட்டமாக கொண்டிருக்கவில்லை என்ற காரணத்தால் குறிப்பாக மத்தியதரவர்க்கப் பண்பாடே நகர்ப்புறப் பண்பாடாகக் கருதிக் கொள்ளப்படுகின்றது. மத்தியதரப் பண்பாடு கிராமியப் பண்பாட்டின் கூறுகளை அதிகமாகக் கொண்டுள்ளதால் நகர்புறத்தில் வாழும் குடும்பங்களின் பிள்ளைகள் மத்தியில் பாரம்பரிய விளையாட்டுக்கள் காணப்படுவதைக் காணமுடிகின்றது. இதனை விட பாடசாலைகளில் அனைத்துப் பண்பாட்டுப் பின்புலத்தில் இருந்தும் சிறுவர்கள் ஓரிடத்தில் இணைவதால் உள்ளக விளையாட்டுக்கள் பல அவர்கள் மத்தியில் பகிரப்படுகின்றன. இதனால் கிராமம், நகரம் என்ற பிரிப்பைக் காணமுடியவில்லை. பாரம்பரிய விளையாட்டுக்களுக்கான விதிகள் கிராமத்துக்குக் கிராமம் வேறுபட்டுக் காணப்படுவதை இனங்காணமுடியும். விதிகள் நெகிழ்வுத் தன்மை உடையன, மகிழ்வுக்காக ஆற்றப்படுவதால் விதிகளை இறுகப்பற்றிக் கொள்வதாக பாரம்பரிய விளையாட்டுக்கள் இருப்பதில்லை.

4.2 குழந்தைப் பருவ விளையாட்டுக்கள்
 

குழந்தை பிறந்து நடக்கும் வரைக்குமான படிப்படியான வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டதாக இவ் விளையாட்டுக்கள் காணப்படுகின்றன. இங்கு குழந்தையும் தாய், தந்தை, பேரன், பேத்தி, மாமா, மாமி, சித்தி, சித்தப்பா என்ற உறவுமுறைகளுக்கும் நிகழும் விளையாட்டாகவே இவ்விளையாட்டுக்களைக் கருத முடியும். குழந்தை கால்களை அடிக்கும் போது, எழுந்திருக்கும் போது, கையசைக்கும் போது, தலைநிமிர்த்தி ஆட்டும் போது, தவழும் போது, நடக்கும் போதான பல சந்தர்ப்பங்களில் இந்த வகையான விளையாட்டுக்கள் முளைத்துக் கொள்கின்றன. “மகிழ்ச்சி” இவ்வளையாட்டுக்களின் அடிப்படையாகும். வெற்றி, தோல்வி இதில் இருக்காது.
 

குழந்தைப் பருவ விளையாட்டுக்கள் பாடலை அடிப்படையாகக் கொண்டன. பாடல்கள் தாளமைவான சத்தத்தை அல்லது சொற்கட்டை அடிப்படையில் கொண்டிருக்கும். பாடிப்பாடி விளையாடுவதாக சிறிய அசைவுகளைக் கொண்டதாக குறிப்பாக பிள்ளையில் இயல்பான வளர்ச்சிப் போக்கு அசைவுகளைக் கொண்டதாக இவ்விளையாட்டுக்கள் காணப்படுகின்றன. இவ்விளையாட்டுக்களை மென்விளையாட்டுக்கள் என்றும் வகைப்படுத்தலாம்.
 

i. தா பூ தாமரைப் பூ

ii. நண்டூருது நரியூருது

iii. கீரைக்குத் தண்ணீர் இறைத்தல்

iஎ. சாலச் சாலச் சப்பாணி

எ. கைவீசம்மா கைவீசு

எi. பிச்சக்காரன் பிராமணப் பெடியன்

எii. ஆணை ஆணை

எiii. சின்னான் சின்னிவிரல்

iஒ. தத்தக்கப் பித்தக்க நாலுகால்

ஒ. ஊஞ்சாலே ஊஞ்சப்பனே

ஒi. சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு

ஒii. சண்டைக்கு வாறியா திறப்புத் தாறியா

ஒiii. டிக் டிக் தபால் பெட்டி

ஒiஎ. டாங்குப் பித்தளம் டசுக்குப் பித்தளம்

ஒஎ. அப்பி அப்பி மாமா

ஒஎi. நாய்க்கு மூக்கில்லை நரிக்கு மூக்கில்லை

 . கீச்சு மாச்சுத் தம்பளம்

சிறுவர் விளையாட்டுக்கள்

சிறுவர்கள் தாம் வாழும் சூழலில் ஒன்று கூடி தமக்குப் பிடித்த விளையாட்டுக்களை விளையாடுகிறார்கள். வீட்டு முற்றம் அனேகமாக சிறுவர்களின் ஆடுகளமாகக் காணப்படுகின்றது. பாடசாலை செல்லும் பிள்ளைகள் வீடுவந்து பாரம்பரிய விளையாட்டுக்களை விளையாடுகிறார்கள். பாடசாலைகளில் பாரம்பரிய விளையாட்டுக்களை விளையாடுவதற்கான வாய்ப்புக்கள் இல்லை. இதனால் வீடும் சுற்றமும் பிள்ளைகளின் விளையாட்டுக் களங்களாகின்றன.
 

சிறுவர் விளையாட்டுக்களும் பாடல்களைக் கொண்டிருக்கின்றன. இதனோடு அதிகமான விளையாட்டுக்கள் வட்டவடிவமான அமைப்பு ஒழுங்கில் விளையாடப்படுகின்றன. வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்பட்டாலும் தோல்விக்காக வருந்துகின்ற அல்லது வேதனைப்படுகின்ற வாய்ப்பு இவ் விளையாட்டுக்களில் இல்லை. அதிகமான சிறுவர் விளையாட்டு ஒருவர் ஓடுவதும் மற்றவர் துரத்திப் பிடிப்பதாகவும் அமைந்திருக்கின்றன. அனைத்து விளையாட்டுக்களுமே வாழ்வை அல்லது வாழ்வின் சம்பவங்களை மீள் பிரதிநதிப்படுத்துபவையாகக் காணப்படுகின்றன. உற்சாக மேலீட்டால் மீண்டும் மீண்டும் விளையாடப்படும் விளையாட்டுக்களாகவே காணப்படுகின்றன. இவ்விளையாட்டுக்களை இடைநிலை விளையாட்டுக்களாகக் கருதலாம்.

Advertisements
Explore posts in the same categories: Culture

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: